வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி - அன்புமணி
வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி என பாமக தலைவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக 16-ஆம் நிதி ஆணையத் தலைவருக்கு அன்புமணி இராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்கு கடந்த ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் 7.931% இருந்ததாவும், இப்போது அது 4.09 %, அதாவது பாதியாக குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரிப்பகிர்வில் தமிழகத்திற்கான பங்கை
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 18, 2024
பாதியாக குறைத்திருப்பது பெரும் அநீதி:
வரிப் பகிர்வு கொள்கையை மாற்ற வேண்டும்!
16-ஆம் நிதி ஆணையத் தலைவருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்
மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்கு கடந்த ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் 7.931%… pic.twitter.com/2RdDrkoArb
இது தொடர்பாக, தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள 16-ஆம் நிதி ஆணையத்தின் தலைவர் முனைவர் அர்விந்த் பனகாரியாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் இன்று பிற்பகலில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் விவரத்தை குறிப்பிட்டுள்ளார்.