‘உரிமை மீட்க தலைமுறைக் காக்க..’ நடைபயணத்திற்கான இலட்சினையை வெளியிட்ட அன்புமணி..!!
‘உரிமையை மீட்க தலைமுறைக் காக்க..’ என்னும் தனது நடை பயணத்திற்கான இலட்சணையை சமூக வலைதள பக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெறும் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறி, வாக்கு சேகரிக்க உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒட்டி வாக்கு சேகரிக்கும் விதமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘உரிமை மீட்க தலைமுறை காக்க” என்கிற பெயரில் நடை பயணம் மேற்கொள்கிறார். இதற்கான லட்சினையை நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
குறிப்பாக சமூக நீதிக்காக குரல் கொடுப்பது, வன்முறை இல்லாத வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை உள்பட 10க்கும் மேற்பட்ட உரிமைகளை வலியுறுத்தி தேதி ஜூலை 25ஆம் தேதி நடை பயணம் மேற்கோள்ள இருக்கிறார் அதற்கான முதற்கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது அதனை தொடர்ந்து தற்போது ‘உரிமை மீட்க தலைமுறைக் காக்க..’ என்கிற இலட்சணையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வளர்ச்சியின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.


