கல்வியில் சாதிக்க மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து!!

 
anbumani anbumani

தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில்  கல்வியில் சாதிக்க மாணவர்களுக்கு  அன்புமணி  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

anbumani

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் கோடைக்கால விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் இன்று மீண்டும்  திறக்கப்படுகின்றன.  ஆசிரியர்களையும்,  நண்பர்களையும் மீண்டும்  சந்திக்கும் மகிழ்ச்சியில் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஏணி கல்வி தான். அதை உணர்ந்து மாணவர்கள் நன்கு கற்று  சாதனை படைக்க வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசு பள்ளிகளில்  அனைத்து ஆசிரியர் காலியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.