விஜயகாந்த் பிறந்தநாள் - அன்புமணி, ஜி.கே.வாசன் வாழ்த்து

 
tn

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அன்புமணி, ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

vijayakanth
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் , தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு, இன்று  அவரது 71-ஆம்  பிறந்தநாளையொட்டி, எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் , தே.மு.தி.க-வின் தலைவர், புரட்சிக் கலைஞர், கேப்டன் திரு. Vijayakant  அவர்களுடைய பிறந்த நன்னாளில்  அவர்களுடைய மக்கள் பணியையும், இயக்கப் பணியையும் சிறப்போடு மேற்கொள்ள நல்ல உடல் நலத்தோடு, தொடர் மனித நேயப் பணிகளையாற்ற  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மனம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.