ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு 4ஆவது முறையாக ஆந்திரா முதலமைச்சராக பதவியேற்றார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடுவுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி. ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு பதவியேற்கும் விழாவில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திரைபிரபலன்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலைய்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Hearty wishes to Hon'ble @ncbn garu on being sworn in as the Chief Minister of Andhra Pradesh for the fourth term. May your leadership bring prosperity and welfare to the state. Looking forward to strengthening the bond and cooperation between Andhra Pradesh and Tamil Nadu for… pic.twitter.com/3Qei93NbkP
— M.K.Stalin (@mkstalin) June 12, 2024
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ளார். உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும். இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


