அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகுவிப்பு வழக்கு - வழக்கு ஒத்திவைப்பு!!

 
tn

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருந்தது. 

anitha radhakrishnan

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது  லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

tn

வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.