படிக்கட்டுக்கு ரூ.11 லட்சமா? அனிதா எழுப்பிய கேள்வியால் வெளிவந்த உண்மை
கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் அமைக்கப்பட்ட படிக்கட்டுக்கு ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாக வெளியான சம்பவத்தின் உண்மை நிலை தெரியவந்துள்ளது.
செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று தற்போது சீரியலில் நடிகையாக நுழைந்திருப்பவர் அனிதா சம்பத். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 12 லட்சத்தில் சிலர் வீடே கட்டுகிறார்கள் எனக் கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
படிக்கட்டுக்கு ரூ11 லட்சமா? : நீங்கள் கேட்பது பொய் செய்தி! @CMOTamilnadu @TNDIPRNEWS (1/2) https://t.co/bpVxeGAhg9 pic.twitter.com/8YDmhGyYak
— TN Fact Check (@tn_factcheck) August 1, 2024
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2022-23ம் ஆண்டில், திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செலவினங்கள் பின்வருமாறு,
என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.