பேராசிரியர் அன்பழகனின் இளைய சகோதரர் மறைவு - முதல்வர் நேரில் அஞ்சலி..

 
பேராசிரியர் அன்பழகனின் இளைய சகோதரர் மறைவு - முதல்வர் நேரில் அஞ்சலி..

பேராசிரியர் க.அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான பேராசிரியர் க.அன்பழகனின் இளைய சகோதரர் க.மணிவண்ணனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக   முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்  செய்தியறிக்கையில், “இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் அவர்கள் நேற்று (18-02-2023) உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைந்தேன். பேராசிரியரைப் போலவே என் மீது மிகுந்த அன்புகொண்டு பழகக் கூடியவர் மணிவண்ணன். அவரை இழந்து வாடும் பேராசிரியரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கழகத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.