பொறியியல் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு - ஜன 21 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என அண்ணா பல்கலை அறிவிப்பு...

 
ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… இன்றே கடைசி; பொழுதுபோனா கிடைக்காது!


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. சில தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டன.  பின்னர் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து, கடந்த சில மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும்  நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால்  ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டது என்றும், செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நேரடி (ஆப்லைன்) எழுத்துத் தேர்வுகளாகவே நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது.

மாணவர்கள் கைது

மேலும் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என கூடுதல் அவகாசம் அளித்தது. ஆப்லைன் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த அட்டவணையை மாற்றி அமைத்து, ஜனவரி 20-ந்தேதிக்கு பிறகு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்த அட்டவணையை ரத்துசெய்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக கால அவகாசம் கொடுத்து, தற்போது புதிய அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.

அண்ணா பல்கலை

அதில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். (இளநிலை) மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். (முதுநிலை) முழு நேர, பகுதி நேர மாணவர்களுக்கு அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக விரிவான அட்டவணைகள்  வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி தொடங்கி, மார்ச் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.