அண்ணா பல்கலை. மாணவி புகார் - முன்னாள் காதலன் கைது

 
anna univ anna univ

தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலை. மாணவி புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Image

தனது முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் காதலை துண்டித்த அண்ணா பல்கலை மாணவியிடம், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டிய ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் காதலன் நடவடிக்கை சரியில்லாததால் காதலை துண்டித்த மாணவி கூறினார். மேலும் அண்ணா பல்கலை. வளாகத்தின் உள்ளே புகுந்து மாணவியை தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

அதேசமயம் மாணவி தனது காதலை துண்டித்ததால், மிரட்டியதாக ராம்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார். முன்னாள் காதலன் ராம்குமார் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.