மு.க.ஸ்டாலினுக்கு ரூ.200 கோடி வழங்கிய ஷெல் கம்பெனி - அண்ணாமலை குற்றச்சாட்டு

 
annamalai

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். 

இந்நிலையில், ஷெல் கம்பெனியிடம் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.