"முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள்" - அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து

 
tn

புதிய கல்வியாண்டில் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு அண்ணாமலை, அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

School Education

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு, புதிய வகுப்புகளுக்கு மாணவச் செல்வங்கள் திரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய 2023-24 ஆவது கல்வியாண்டு சிறப்பானதாக அமையவும், கல்வியில்  மாணவச் செல்வங்கள் புதிய சாதனைகளைப் படைக்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று, முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச்  செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


கேடில் விழுச்செல்வம் கல்வி. நாட்டின் எதிர்காலத் தூண்களான நீங்கள் அனைவரும், பெறுவதற்கு அரிய செல்வமான கல்வியை நலமுற கற்று,  நற்பண்புகளுடன், பெற்றோரையும், ஆசிரியர்களையும், தேசத்தையும் பெருமைப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.