அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்காத திமுக அரசை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை

 
annamalai annamalai

அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்காத திமுக அரசின் மோசடித்தனத்தை கண்டித்து வருகிற 18ஆம் தேதி முதல் திண்டிவனம், விழுப்புரம்,  உள்ளிட்ட இடங்களில் பாஜக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடார்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், 1.60 கோடி விண்ணப்பங்களை பெற்று, அதிலும் கூட 56 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டனர். வாக்குறுதியை நிறைவேற்ற ஏற்பட்ட கால தாமதத்தால் ஏற்கனவே ஏமாற்றத்தில் இருந்த தாய்மார்கள், திமுக அரசின் துரோக நடவடிக்கையால் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.


திமுக அரசின் மோசடித்தனத்தை கண்டித்து கிராமப்புறங்களை அதிகம் கொண்ட விழுப்புரம் பெருங்கோட்ட பகுதியில், 18ஆம் தேதி முதல் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருவள்ளூர், கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மாநில செயலாளர் திரு 
வினோஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தொடர் ஆர்ப்பாட்டம்  நடைபெறும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.