கர்நாடக சட்டமன்ற தேர்தல் - இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

 
annamalai annamalai

கர்நாடகாவில் பசவரராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் வரும் மே மாதத்துடன் பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவு பெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தற்போது பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதேசமயம் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது. 

Annamalai

இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

tn

கர்நாடகாவில் பத்து ஆண்டுகள் காவல் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றிய நிலையில் அங்குள்ள அரசியல் சூழலை அவர் நன்கு அறிவார் என்பதால் அவருடைய பணி அனுபவம் தேர்தலில் பணியாற்ற கை கொடுக்கும் என்ற காரணத்தினால் அவர் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.