ஆறுதல் சொல்ல நேரில் வந்த அண்ணாமலை மனமுடைந்து கண்கலங்கிய ராதிகா..!
Sep 23, 2025, 13:39 IST1758614957981
நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயுமான கீதா ராதா செப்.21 காலமானார். பெசன்ட்நகர் மின்மயானத்தில் கீதா ராதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரின் தாயார் காலமான நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை துக்கம் விசாரித்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த கீதா ராதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தின அண்ணாமலை, சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


