"நீ தான்யா கஞ்சா உதயநிதி" - அண்ணாமலை ஆவேசம்!!

 
Annamalai

ஈரோட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர் , திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.  திமுகவின் சாதனை என்பது போதை பொருட்கள் புழக்கத்தை பரவி இருப்பது தான்.  திமுகவின் அத்தனை தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் போதை பொருள் விற்பவர்கள்.  பிரதமரின் வீடு , குழாயில் குடிநீர் ,முத்ரா கடன் உதவி , விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்  6000 கௌரவ நிதி என மக்களுக்கு நேரடியாக பிரதமர் மோடி வழங்கி வருகிறார் . கோபாலபுரத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்பது மக்களுக்கு தெரியாதா?


எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகள் ஊழலற்ற நல்லாட்சியில் மூலம்  நிரூபித்து இருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. நாங்கள் மரியாதை அரசியல் செய்தாலும் , நீங்கள் கோட்டை தாண்டினால் நாங்களும் தாண்டுவோம். 29 பைசா மோடி என்று அழைக்கச் சொன்னால் கஞ்சா உதயநிதி என்று சொல்ல வேண்டும் என்றார்.