தமிழக அரசியலில் பரபரப்பு! ஈபிஎஸ-ஐ தொடர்ந்து அண்ணாமலை டெல்லி பயணம்!

 
annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 

நேற்று முன் தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழக மக்களின் உரிமைக்காக அமித் ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்றார். பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா வை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு மூத்த தலைவர் மூலமாக அமித்ஷா வை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.