விஜயகாந்த் பிறந்தநாள் - தினகரன் , அண்ணாமலை வாழ்த்து

 
tn

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை, தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

vijayakanth

இந்நிலையில் அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று 71வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க. நிறுவன தலைவர் அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

tn

நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளருமான கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு, @BJP4Tamilnadu  சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கேப்டன் திரு.  விஜயகாந்த் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நிறைந்த நலன்களுடன் மக்கள் பணி தொடர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.