துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் செஸ் வீரர் ராமேஷ் - அண்ணாமலை வாழ்த்து

 
Annamalai Annamalai

தேசிய அளவில் விளையாட்டு துறையில், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் செஸ் வீரர் ராமேஷுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  தேசிய அளவில் விளையாட்டு துறையில், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் திரு ரமேஷ் அவர்களுக்கு, தமிழக பாஜக  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் விளையாட்டில், உலக அரங்கில் பல சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் ரமேஷ்  அவர்களது மாணவர்களே, அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய கௌரவத்திற்குச் சாட்சி. அவர் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கி, நம் தேசத்தைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.