அனைவரின் வாழ்விலும், அமைதி, ஆரோக்கியம், செல்வம் பெருகட்டும் - அண்ணாமலை

 
Annamalai Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளித் திருநாள், அனைவரின் வாழ்விலும், அமைதி, ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் தருவதாகவும், சமூகத்தில் ஒற்றுமை நிலவுவதாகவும் அமையட்டும். இந்த இனிய திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.