சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் சர்தார் வல்லபாய் படேல் - அண்ணாமலை!
சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், பாரத ரத்னா, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் பிறந்த தினம் இன்று. சுதந்திரப் போராட்டத்தில், தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களையும், அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து, சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டவர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், பாரத ரத்னா, சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் பிறந்த தினம் இன்று.
— K.Annamalai (@annamalai_k) October 31, 2024
சுதந்திரப் போராட்டத்தில், தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சட்டப்… pic.twitter.com/Yin6w2kOKa
இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக, நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவராக திகழும் அமரர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


