தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் - அண்ணாமலை!
May 16, 2025, 13:52 IST1747383775463
10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் சோர்ந்து போய் விடக் கூடாது. பள்ளித் தேர்வு என்பது, வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. அது மட்டுமே ஒருவரின் ஒட்டு மொத்த வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எனவே, அடுத்த முறை சிறப்பாகப் படித்து, முழு நம்பிக்கையுடன் தேர்வெழுதி வெற்றி பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நாட்டின் வருங்காலச் சிற்பிகளான மாணவர்கள் அனைவருக்கும், மிகச் சிறப்பான எதிர்காலத்தை இறைவன் அருளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


