திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார் அண்ணாமலை!

 
Annamalai Annamalai

ஏற்கனவே அறிவித்தது போல திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இது முதல் பாகம் என்றும், அடுத்த பாகம் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. நிர்வாகிகள்  கூறியுள்ளனர்.  

இந்நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசிக்க தொடங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், தான் தெரிவிக்கும் அனைத்து புகாருக்கும் ஆதாரம் இருப்பதாக கூறினார். அவதூறுகளை அள்ளித் தெளிப்பதற்காக நான் இங்கே வரவில்லை எனவும் அண்ணாமலை கூறினார்.