ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

 
bjp

தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கவுள்ளார்.
 

annamalai

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார்.  கடந்த 18ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி  அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ,அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக பலரும் சந்தித்து வருகின்றனர். 

ttn

இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் என்.ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை சந்தித்து பேசுகிறார் . இந்த சந்திப்பில் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கிறார் அண்ணாமலை. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் அண்ணாமலை பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.