தலைசிறந்த தேசியவாதியான சிவாஜி கணேசனின் புகழை போற்றி வணங்குகிறேன் - அண்ணாமலை

 
Annamalai

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  திரைப்படங்களில், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பல்கலைக்கழகம், சிம்மக் குரலோன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவு தினம் இன்று.


பல்வேறு மொழிகளில், ஏறத்தாழ 300 திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையைப் பறைசாற்றியதோடு, இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும், தாம்பரம் காச நோய் மருத்துவமனை அமைக்கவும் பெரும் நிதியுதவி செய்தவர். இந்தியா பாகிஸ்தான் போரின் போது, அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் 500 சவரன் நகையை நிதியாக வழங்கியவர். சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாகப் பிறந்து, கர்மவீரர் காமராஜரின் பக்தராக, தலைசிறந்த தேசியவாதியாக விளங்கி, பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளுக்குப் பெருமை சேர்த்த சிவாஜி கணேசன் புகழை தமிழக பாஜக சார்பாகப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.