“விஜய், தவெகவை இனி விமர்சிப்பேன்”- அண்ணாமலை
விஜயை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “செய்தியாளரை எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கிய விவகாரத்தில், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்.. MLA-வை கைது செய்ய வேண்டும். விஜயை இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. தவெகவிற்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை.ஆனால் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத்தை சேர்ந்தவர்களை வைத்து விமர்சித்தால் தக்க பதிலடி கொடுப்பேன். விஜய்யை, தவெகவை இதுவரை விமர்சிக்க தொடங்கவில்லை. இனி விமர்சிப்பேன். தவெகவில் உள்ள அல்லுசில்லுகளுக்கு கடுமையான பதிலடி தருவேன். 3,4 கட்சி மாறியவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சீண்டினால் பதிலடி கொடுப்பேன். எங்கள் கூட்டணியின் தலைமை யார் என்பதை எங்கள் கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர், விஜய்யின்ேச்சு ஆழம் நிறைந்த ஒன்றாக சிந்திக்க வைக்கும் விதமாக இல்லை. கட்சியினரை கைத்தட்ட வைக்கும் விதமாக மட்டுமே விஜய் பேசுகிறார்.” என்றார்.


