“பகுத்தறிவு பேசுகிற வெங்காயம்..”- அமைச்சர் மனோ தங்கராஜை விளாசிய அண்ணாமலை

 
annamalai mano thangaraj annamalai mano thangaraj

எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா? என அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Minister Mano Thangaraj Involved In Smuggling Ore From TN To Kerala',  Alleges Annamalai During Padayatra In Kanyakumari's Padmanabhapuram

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ். கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது. எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?


இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா? தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் செல்வது உண்மையிலேயே நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என அமைச்சர் மனோராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.