திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியீடு - டிரைலரை வெளியிட்ட அண்ணாமலை!

 
Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடுவேன் என அறிவித்து இருந்த நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கையில் அணிந்திருந்த ரஃபேல் வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் சூடுபிடித்த நிலையில், திமுகவினர் அணிந்திருக்கும் வாட்ச் பல கோடி மதிப்புள்ளது என பாஜகவினர் பதிலடி கொடுத்தனர். இந்த விவகாரம் உச்சகட்டியம் எட்டிய நிலையில், அந்த வாட்சுக்கான பில்லை வருகிற 14ம் தேதி வெளியிடுவேன் என கூறிய அண்ணாமலை, அன்றைய தினமே திமுகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அண்ணாமலை வெளியிடும் வீடியோவுக்காக காத்திருப்பதாக திமுகவினர் தெரிவித்து இருந்தனர். அண்ணாமலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என தெரிவித்தனர். 


இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திமுக ஊழல் பட்டியல் நாளை காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பாஜக அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
  அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.