பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம்?

 
Annamalai Annamalai

பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலைக்கு பதில் புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளன.