நயினார் நாகேந்திரன் மீதான அதிருப்தியால் விலகி அண்ணாமலை
தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புகிறேன் என்றும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீதான அதிருப்தி காரணமாகவே, கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு சம்மந்தமில்லாத தொகுதிகளை ஒதுக்கியதால் அதிருப்தியடைந்ததாகவும், அவரைப் போன்று மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


