தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் - அண்ணாமலை

 
annamalai

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன்  இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி,  தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஷெல் கம்பெனி 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒருகட்சியை மட்டும் எதிர்க்க முடியாது; மொத்தமாக எதிர்க்க வேண்டும். தலைவராக இருக்கும்வரை இப்படிதான் செயல்படுவேன். யார் தவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் எனக்கவில்லை. என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். ஊழலுக்கு எதிராக ஜூலையில் "என் மண், என் மக்கள்" என பாதயாத்திரை நடைபெற உள்ளது. இவ்வாறு கூறினார்.