ஐயோ அம்மா என கதறுகிறார் அண்ணாமலை.. முழு டகால்டி குழு... - காயத்ரி ரகுராம் சாடல்..

 
gayathri raghuram annamalai


திமுக ஊழல் வீடியோ, காமெடி வீடியோ ஷோவாக மாறியிருப்பதாக பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்  விமர்சித்துள்ளார்.  

தமிழ் புத்தாண்டு தினமான இன்று  ( ஏப்ரல் 14) திமுக சொத்து மற்றும் ஊழல் பட்டியலை  வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு  சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டார்.  அதில் திமுகவின் ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, பொன்முடி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட 17 முக்கிய நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.  

Annamalai

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்ட  திமுகவின்  ஊழல் வீடியோவை காயத்ரி ரகுராம்  விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “திமுக கோப்புகள் (DMK Files) காமெடி வீடியோ ஷோவாக மாறியது, இதில் பார்ட் பி கூட வருகிறது.. கடைசியில் திசை திருப்பி மதனின் ஸ்டிங் ஆபரேஷன் அண்ணாமலை & மதுகர் ஷெட்டி கோப்புகள் (Annamalai Circus singam vs Madhukar Shetty Real singam files) அண்ணாமலையை புரட்டிப் போட்டது, இப்போ அண்ணாமலை வெளிப்படையாகவே ஐயோ அம்மா என்று கதறுகிறார். அவரை குறுக்கு கேள்வி கேட்க பத்திரிகைகள் அனுமதிக்கப்படவில்லை. முழு டகால்டி கிளாப்ஸ் டகால்டி மோசடி குழு.  எந்த நடவடிக்கையும் இல்லை பேசுவது மட்டுமே.” என்று குறிப்பிட்டுள்ளார்.