கொள்ளையடிப்போரை பாதுகாக்கும் அண்ணாமலை - சீமான் கூட்டணி !

 
ef

ஆளும் பாஜக உதவி இல்லாமல் பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்த நடிகர் சுரேஷ் தலைமறைவாக இருக்க முடியாது என்று வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். 

இதுக்குறித்து விடுதலை கட்சியின் நிர்வாகி வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது மக்கள் பணத்தை ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடித்த வழக்கான #ஆருத்ரா மோசடி வழக்கில் 3,500 புகார்கள் வந்துள்ளதாகவும், 4000 பக்க முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்  526 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி திரு.ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

seeman

இந்த வழக்கில்  இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,முக்கிய குற்றவாளியான நடிகரும் பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவருமான ஆர்.கே.சுரேஷ் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர் #ஓம்தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமானுக்கும் #பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நெருங்கிய நண்பராவார்.இந்த பண மோசடி வழக்கில் திரு.அண்ணாமலைக்கும் தொடர்பு உண்டு என திமுக அமைப்புச்செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களும் குற்றம் சாட்டினார்.ஆளும் பாஜக உதவி இல்லாமல் பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்த நடிகர் சுரேஷ் தலைமறைவாக இருக்க முடியாது.

tn

ஆகவே,பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் #பாஜக அல்லது ஓம்தமிழர் கட்சியினர் வீடுகளை கண்காணித்தால் பொருளாதார குற்றவாளிகள் அகப்பட வாய்ப்புள்ளது.குற்றவாளிகள் தப்பிக்க விடக்கூடாது.(கூடுதல் செய்தி: ஆர்.கே.சுரேஷின் உடன் பிறந்த சகோதரர் சிவக்குமார் #ஓம்தமிழர்கட்சின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்)" என்று குறிப்பிட்டுள்ளார்.