‘திமுகவுக்கு இதே தான் வேலை! போகாத ஊருக்கு வழி தேடாதீர் முதல்வரே’- அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

பிரதமரை அரசியல் சாசனத்திற்கு தலை வணங்கச்செய்துவிட்டதாக முதலமைச்சர் கூறியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

அண்ணாமலை

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க., தனது நிர்வாக மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைத்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் விழா கொண்டாட புதுப்புது காரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ண்டுபிடிக்கிறார். நிர்வாக தோல்விகளை மறைத்து விழா கொண்டாடுவதே திமுகவின் வழக்கம். பாஜக மீது தார்மீக வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஆதாரமற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40-க்கு 40 பெற்றதை தார்மீக வெற்றி என்றும் வரலாற்ற வெற்றி என்றும் தெரிவிக்கிறார். துண்டு சீட்டில் பிறர் எழுதி கொடுப்பது உண்மையா என்று கூட தெரியாமல் முதல்வர் அப்படியே பேசி விடுகிறார்.

Image

2010ல் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே அரசியல் சாசனத்தை ஊர்வலமாக எடுத்துச்சென்றவர் பிரதமர் மோடி. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற படிகளையும், 2019 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தையும் பிரதமர் மோடி தலை வணங்கியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் மரியாதை பற்றியும், அவரது வாழ்க்கை முறை குறித்தும் தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமை. ஆனால் இந்தியா கூட்டணிக்கு அரசியலமைப்பு சட்டம் என்பது வெறும் துண்டு காகிதம்தான். அதனால்தான் எப்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் அரசியலமைப்புக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். 


இந்தியா கூட்டணி சந்தர்ப்பவாதிகள், வம்சவாதிகள் மற்றும் ஊழல்வாதிகள் நிறைந்த கூட்டணி.  13 கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி மொத்தமாக 232 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த எண்ணை கூட இந்தியா கூட்டணியால் நெருங்க முடியவில்லை. போகாத ஊருக்கு வழி தேடுவது என்ற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அது போன்றதொரு உலகில் முதல்வர் ஸ்டாலின் தனது தார்மீக வெற்றியை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். தப்பு செய்த குற்றவாளிகளை தெருக்களில் சுதந்திரமாக திரிய விட்டுவிட்டு, சமூகவலைதள பதிவுகளுக்காக நள்ளிரவில் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை அமல்படுத்தாத போதே முதல்வர் ஸ்டாலின் அரசியல் சாசனத்தை முற்றிலும் அலட்சியப்படுத்துவது தெரிகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.