கோவையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை- யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை: அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை,  தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞரை காரில் அழைத்துச் சென்று வெட்டிக்கொலை: தப்பியோடிய மர்ம  நபர்களுக்கு போலீஸ் வலை | Advocate was taken in a car and hacked to death  Police net for fugitives - kamadenu.in


இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வ சாதாரணமாகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.ஸ்டாலின், இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. 

Annamalai

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை,  தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.  சமூக வலைத்தளங்களில், திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில், கையாலாகாத முதலமைச்சர் என்றே அறியப்படுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.