காமராஜர் குறித்துப் பேச திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை- அண்ணாமலை

 
s s

தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் ஐயா காமராஜர் குறித்துப் பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Why Annamalai Stepped Down as BJP Chief in Tamil Nadu for Nainar Nagendran

இதுதொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “மக்கள் தலைவர்களை எல்லாம் தரக்குறைவாகப் பேசி அவமதித்த, அசிங்கமான வரலாறுகள் நிறைந்த திமுக, பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களை அவமானப்படுத்த முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை. ஐயா காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும். தற்போது அப்படிப் பேசினால், பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதால், திரு. திருச்சி சிவா, திரு. கருணாநிதியைப் புனிதப்படுத்த முயற்சிக்கிறார்.


பொய்களையும், புரட்டுகளையும், வெறுப்புணர்வையும் தூண்டி வளர்ந்த கட்சிதான் திமுக. அத்தனை புரட்டுகளுக்கும் ஆதாரமாக, பொய் மூட்டை நெஞ்சுக்கு நீதியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். உண்மை என்னவென்றால், அந்த நெஞ்சுக்கு நீதியை திமுக கட்சிக்காரர்கள் ஒருவர் கூட படித்ததில்லை. குறிப்பாக, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதை, அவரது மகனான, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே படித்ததில்லை என்பது பலமுறை வெளிப்படையாகத் தெரிந்த உண்மை. தனது இறுதி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்த கர்மவீரர் ஐயா காமராஜர் குறித்துப் பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.