பங்காரு அடிகளார் மனைவியிடம் பிரதமர் அளித்த கடிதத்தை வழங்கிய அண்ணாமலை

 
அண்ணாமலை

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மனைவியை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் அளித்த இரங்கல் கடிதத்தை வழங்கினார்.

Image

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர்‌ கேசவவிநாயகம் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முன்னதாக கோவிலின் அருகே உள்ள பங்காரு அடிகளாரின் நினைவிடத்திர்க்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து இல்லத்திற்கு வந்தவர்கள் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அம்மாள் மற்றும் அவரது இளைய மகன் செந்தில்குமாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி அளித்த இரங்கல் கடிதத்தை வாசித்து காட்டி அவர்களிடம் வழங்கினர். முன்னதாக அங்கு வந்த திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்‌.முருகன், இரண்டு நாட்களுக்கு பாஜக சார்பில் பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம், தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நட்டா ஆகியோர் இரங்கலை பதிவு செய்தனர். நரேந்திர மோடி அவர்கள் அம்மா மீது அதீத பக்தி கொண்டிருந்தார்கள். அவரது சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மோடி அவர்கள் சென்னை வந்தபோது அம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து ஆசிர்வாதம் கொடுத்தனர். பிரதமர் மோடி இரங்கல் கடிதம் வழங்கினார். அதனை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உள்ளோம் என தெரிவித்தார்.