தமிழக மாணவர்கள் அனைத்து தேர்வுகளிலும் சாதனை படைக்கும் திறமை படைத்தவர்கள் - அண்ணாமலை

 
Annamalai

JEE முதன்மைத் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பொறியியல் கல்விக்கான, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு JEE முதன்மைத் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், 300-க்கு 300 மதிப்பெண் பெற்று, அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்ற 23 மாணவர்களில் ஒருவராகச் சாதனை புரிந்துள்ளார்.


தமிழக மாணவர்கள் அனைத்துத் தேர்வுகளிலும் சாதனை படைக்கும் திறமை படைத்தவர்கள் என்பதை, தேசிய அளவிலான, NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பெற்று வரும் நமது மாணவர்கள் நிரூபித்துக் கொண்டிருப்பது பெருமையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.