#jothimani "அண்ணாமலை கரூரில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது"- ஜோதிமணி பேட்டி

 
Jothimani
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார் ஜோதிமணி.
இன்று சென்னையில் செய்தியாளரை சந்தித்த ஜோதிமணி, பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில்," பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
பாஜக அவர் தலைமையில் தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்றால் அவர் தனது சொந்தப் தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
கரூர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் டெபாசிட் போய்விடும் என்பது அவருக்கு தெரியும். அதனால் தான் இந்திய கூட்டணி வேட்பாளர் ஆகிய என்னை எதிர்த்து நிற்க பயந்து கோயம்புத்தூருக்கு ஓடி விட்டார் என்று கூறினார்..