அண்ணாமலை நடைபயணம் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா புறக்கணிப்பு

 
premalatha vijayakanth

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை  பிரேமலதா புறக்கணித்துள்ளார்.

Annamalai

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணம் மேற்கொள்கிறார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை  ராமேஸ்வரத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதுக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார்.  அவர்   தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார். அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

DMDK leader Vijayakanth and Premalatha recovers from COVID-19; Discharged from hospital today

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை  தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இருப்பினும் நடைபயண தொடக்க விழாவில் தேமுதிகவின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.