அன்னபூரணி சர்ச்சை - மன்னிப்பு கோரியது ஜீ நிறுவனம்

 
tn

நடிகை நயன்தாரா சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் அன்னபூரணி அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கிய நிலையில்  சமீபத்தில் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது இந்த சூழலில் மும்பை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி இந்த படத்தில் வரும் சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

tn

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும்,  அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ்  செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதுடன்,  வேண்டுமென்றே இந்த காட்சிகளை எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது என்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

tn
இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் நெட்பிளிக்சில் இருந்து அன்னபூரணி படம் தற்காலிக நீக்கப்பட்டுள்ளது.  படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் கடிதம் எழுதிய நிலையில் ஜீ நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்துக்கள், பிராமணர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை; யாரின் உணர்வுகளாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று ஜீ நிறுவனம் கூறியுள்ளது.