செம அறிவிப்பு..! தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு..!
Sep 20, 2025, 12:04 IST1758350055307
பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
மேலும், கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது என கூறினார்.


