சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 
school

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

school

சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ,முன்தினம் பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில்  உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெற்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.