காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி அறிவிப்பு! யார் இவர்?
காஞ்சி காமகோடி பீடம் என அழைக்கப்படும் ஆதிசங்கரர் தோற்றுவித்துபழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதியாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த 71 வது பீடாதிபதி யார் என்ற கேள்வி சங்கர மட பக்தர்கள் மத்தியில் எழுந்து வந்தது. பக்தர்களின் வேண்டுதலின்படி காஞ்சி சங்கர மடத்தின் 71 வது பீடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் கஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் ஆந்திர மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்த, துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா டிராவிட் எனும் இயற்பெயரைக் கொண்ட, ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் காஞ்சி சங்கர மடத்தின் 71ஆவது பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நிர்மல் மாவட்டம், பாசரா, பகுதியில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீ கணேச ஷர்மா டிராவிட், கடந்த
2006ம் ஆண்டு வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிகளை பெற்று ரிக், யஜுர்,சாம, வேதங்களையும்,சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றுள்ளார். இதையடுத்து வரும் ஏப்ரல் 30ஆம் தேதி அக்ஷய திருதியை நன்னாளில் காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது காஞ்சி சங்கராச்சாரியார்,ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ கணேச ஷர்மா டிராவிட் க்கு,சன்யாச தீக்ஷை வழங்குகிறார். இளைய பீடாதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் சுவாமிகளின், குடும்பம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பகுதியை பூர்வீகமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


