மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் தேதி அறிவிப்பு

 
chennai bus chennai bus

சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், பேருந்து பயண டோக்கன்கள் வரும் 21-ம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

bus ticket

சென்னை மாநகர பேருந்துகளில்  மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் .  6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகிய பணிகள் 21-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன.  இதற்காக  சென்னையில் உள்ள 27 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

அதன்படி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பஸ் நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் பஸ் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பஸ் நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய 27 மையங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.