மீண்டும் பிரமாண்ட மாநாடு- விஜய் திட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தலுக்காக ஒரு மாநாடு மற்றும் 3 பிரமாண்ட பொதுக்கூட்டம் அல்லது ஐந்து மண்டல பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தலுக்காக ஒரு மாநாடு மற்றும் 3 பிரமாண்ட பொதுக்கூட்டம் அல்லது ஐந்து மண்டல பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தவுள்ளார். இதற்காக தேர்தல் பிரச்சாரக் குழுவுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளர். ஏற்கனவே, விக்கிரவாண்டி மற்றும் பாரபத்தி ஆகிய இடங்களில் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
அதை தொடர்ந்து இன்னும் ஒரு மாநாடு நடத்த திட்டமிடுகின்றனர். மாநாடு நடைபெற்றால் அதை தொடர்ந்து 3 பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தல ஒரு பொதுக்கூட்டம் என 5 பொதுக்கூட்டங்கள் நடத்தவும் அக்குழுவுடன் ஆலோச்னை நடைபெற்றுள்ளது.


