திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம்
திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம் பியுமான அன்வர் ராஜா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுக - பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருந்து வருகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த போதும் அக்காட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த அன்வர் ராஜா, சி ஏ ஏ சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும், நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசி இருந்தார். இந்த நிலையில், அண்மையில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புலவர் இந்திரகுமாரி வகித்துவந்த திமுக இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


