"சிறிய சறுக்கலுக்கு பின் இணைந்துள்ளேன்" - அன்வர் ராஜா பேட்டி!!

 
tn

2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா.

tn

ராமநாதபுரம் மாவட்டம் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆக இருந்தவர் அன்வர் ராஜா கடந்த 2001 முதல் 2006 வரை அதிமுகவில் அமைச்சராக இருந்த இவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததன் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது கருத்துக்களை முன்வைத்து வந்த இவர், எந்த ஒரு அரசியல் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். இந்த சூழலில் அதிமுகவில் இருந்து பிரிந்து செல்பவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

tn

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஒரு சிறிய சருக்கலுக்கு பின் அதிமுகவில் மீண்டும் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.  கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தொண்டர்களின் இல்ல நிகழ்வில் பங்கேற்று வந்தேன். பாஜக மீதான விமர்சனம் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் உடனே கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிடும்.  பாஜகவுடன் அதிமுக புதிதாக கூட்டணி வைத்துள்ளது என்பதை நான் ஏற்கவில்லை.  எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்என்றார்.