ஏ.ஆர்.ரகுமானுக்கு நெஞ்சுவலி இல்லையாம்... அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
உடல்நலக்குறைவு காரணமாக இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி பாதிப்பு என்றும், இதனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. அதன் பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்ததை அடுத்து, தற்போது அவர் நலம்பெற்று வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியானது
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏ.ஆர்.ரகுமான் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர் சத்து குறைபாடுகளுக்கான வழக்கமான பரிசோதனைகளை முடித்து கொண்டு வீடு திரும்பினார். அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் நலமுடன் உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளது.