முதலமைச்சரை மிஸ்டர் என கூறுவதா?- ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம்

 
பேரவையை வழிநடத்தும் மாற்று தலைவர்கள் யார்? யார்? – அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு! பேரவையை வழிநடத்தும் மாற்று தலைவர்கள் யார்? யார்? – அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு!

முதலமைச்சர் குறித்து மிஸ்டர் என எக்ஸ் தளத்தில்  ஆளுநர் பதிவிட்டு இருப்பது அவருடைய தகுதிக்கு சரியா? இது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அப்பாவு

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “முதலமைச்சர் குறித்து மிஸ்டர் என எக்ஸ் தளத்தில்  ஆளுநர் பதிவிட்டு இருப்பது அவருடைய தகுதிக்கு சரியா? இது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. ஆளுநரின் குணம் இதிலிருந்தே தெரிந்து விட்டது. ஆளுநரின் செயல்பாடு இந்திய அரசியல் அமைப்பிற்கே எதிரானது. ஆளுநர் சட்டமன்றத்தில் உரையை வாசிக்க வேண்டும் வாசிக்காமல் சென்றால்... நாங்கள் என்ன செய்ய முடியும்?  2023 ஆம் ஆண்டு தேசிய கீதம் பாடும்போதே செல்கிறார்... தேசிய கீதத்தை ஆளுநர் அவமதிக்கிறார். இதிலிருந்து விடுபட எக்ஸ் வலைதளத்தில் அழித்து அழித்து பதிவு போடுகிறார.  இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர்தான் முடிவு செய்ய முடியும். சட்டப்பேபரவையில் அனைத்து எம்எல்ஏகளுக்கும் போதிய நேரம் வழங்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என்பதை அந்தந்த கட்சி தான் முடிவு செய்து அனுப்புகிறார்கள், அதன்படி  அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.